நனிசைவ உணவுமுறை _ திட்டமிடுதல்


நனிசைவ உணவுமுறையை திட்டமிடுவது மிகவும் சுலபமானது. தானியங்கள்,  விதைகள், கிழங்கு வகைகள், போன்றவை, இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்தனவாகும்.  பச்சை தாவரங்கள், இலைகள்(கீரை), பீன்ஸ், முளைவிட்ட பயறு வகைகள், சோளம், கடலை வகைகள், பருப்பு வகைகள் போன்றவை கால்சியம் மற்றும் புரதத்தின் உறைவிடமாகத் திகழ்கின்றன. சோயா பால் மற்றும் செரிவூட்டப்பட்ட பழரசங்களும் அவ்வாறே புரதமும், கால்சியமும் நிறைந்து விளங்குகின்றன. இவற்றை தற்போதைய அசைவ உணவுமுறையில் உள்ள மாமிசங்களின் இடத்தில் வைக்கும் போது நனிசைவ உணவு முறையை நீங்கள் கையகப்படுத்துகிறீர்கள்.

சூரிய ஒளி நம் தோல் பரப்பின் மீது விழும்போது, நமது உடலில் உள்ள செல்கள், வைட்டமின் D யை இயல்பாகவே உற்பத்தி செய்து விடுகின்றன. காலை நேர சூரிய ஒளியானது வைட்டமின் D யின் சிறந்த உறைவிடமாகும்.
மேலும், சூரிய ஒளியின் சக்தி குறைவாக இருக்கும் இடங்களில் (பூமத்திய ரேகையின் வடக்கே இருக்கும் நாடுகள்) செரிவூட்டப்பட்ட உணவு வகைகள் மூலமாக வைட்டமின் D யை பெற்றுக்கொள்ளலாம்.

வைட்டமின் B12 அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தாகும். செரிவூட்டப்பட்ட தானிய வகைகள், காளான், சோயா பால், மற்றும் சில உணவாதாரங்களில் அனைத்து வகையான வைட்டமின் சத்துக்களும் இருக்கும். தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், வைட்டமின் B12 மிகவும் அவசியம். பதனிடப்பட்ட, அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கும் போது, அதன் லேபிலில் (LABELS) சையானோகோபாலாமின் (CYANOCOBALAMIN) என்ற பெயர் இருக்கிறதா என்று பாருங்கள். இதுவே, வைட்டமின் B12-ன் எளிதில் உட்கொள்ளக்கூடிய வடிவமாகும்

எனவே, நனிசைவ உணவுமுறையை திட்டமிட நீங்கள் பெரிதாக மெனக்கெடுக்க வேண்டியதில்லை. அது, உங்கள் சுற்றத்திலேயே, இயல்பாக பல சத்துக்களை கொண்ட காய்கறிகள் மூலம் உங்கள் உணவு முறையில் சேர்கிறது. மாமிச உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் உடலும் மனமும் பெரும் ஆரோக்கியத்தைப் பெறுகிறது.